Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம் வீசும் அவலம்

திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஸ்ட் பவுல்வார்டு ரோடு (EB Road) பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியின் நுழைவாயில் முன்பாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு முன்பாகவே குப்பைகள் கொட்டப்பட்டுத் துர்நாற்றம் வீசுவதால், அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தினசரி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவிற்கு எவ்வித அசுத்தமும், சுகாதாரச் சீர்கேடும் இல்லாமல் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், திருச்சி இபி ரோடு பகுதியில் உள்ள

இந்த அரசுப் பள்ளிக்கு முன்பாகப் பொதுமக்களாலும், வணிக நிறுவனங்களாலும் கொட்டப்படும் கழிவுகள் பல நாட்களாக அள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. பள்ளிக்கு வரும் பாதையிலேயே குப்பை மேடு போலக் காட்சி அளிப்பதால், கல்வி கற்கும் சூழல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி இபி ரோடு அரசுப் பள்ளி முன்பு தேங்கியுள்ள உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் இதர கழிவுகளால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த துர்நாற்றத்தைச் சகித்துக் கொண்டே மாணவர்கள் பள்ளி வகுப்பறைகளில் அமர வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. மேலும், தேங்கிக் கிடக்கும் குப்பைகளில் ஈக்கள் மற்றும் கொசுக்கள் அதிகளவில் மொய்ப்பதால், பள்ளி குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா போன்ற கொடிய தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்துப் பலமுறை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் முறையிட்டும், கழிவுகளை முறையாக அகற்றுவதற்கு எவ்வித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளிக்கு உள்ளே தூய்மை காக்கப்பட்டாலும், வாசலிலேயே இருக்கும் இந்த அவலத்தால் பள்ளிக்கு வரும் சிறு பிள்ளைகள் முகத்தைப் பொத்திக்கொண்டு செல்லும் நிலை நாள்தோறும் தொடர்கிறது.

error: Content is protected !!