ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் மறைவுக்கு பேரரசு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், செழியனின் மரண செய்தி மனதை உலுக்கியுள்ளது. செழியன் என் நண்பன், ஊர் தோழன். சினிமா பயணத்தை நான் தொடங்கியபோது என்னை வாழ்த்தி ஊரில் இருந்து வழியனுப்பி வைத்தது அவர் தான். நண்பரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
