பெரம்பலூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நேற்று சீனிவாசநகர் 7வது குறுக்கு சாலையில் இருந்து நகரப் பேருந்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பயணம் செய்து கொண்டிருந்தார். பின் பேருந்து நிலையம் இறங்கியபோது, அவரது பையில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள நகையை காணாமல் போயிருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஸ்சில் பயணம் செய்தவரின் நகை மாயம்… விசாரணை
