Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு

கரூர் மாவட்டம் குளித்தலை திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் மலர்வேல் (வயது 58) இவர் கடந்த 10 ந் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி வந்தார்.
அப்பொழுது அவர் உறையூர் சீனிவாசன் நகர் 7வது கிராஸ் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென்று இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி சாலையில் விழுந்தது. இந்த விபத்தில் மலர்வேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மலர்வேல் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!