சென்னையிலிருந்து லண்டன் புறப்படவிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீது பறவை மோதிய காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு லண்டனிலிருந்து சென்னை வந்தடைந்த இந்த விமானத்தின் மீது பறவை மோதியதை விமானி கண்டறிந்ததை அடுத்து, முழுமையான ஆய்விற்காக விமானம் நிறுத்தப்பட்டது. இதனால், லண்டன் செல்லவிருந்த 268 பயணிகள் அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் இருந்து தப்பினர். இந்நிலையில், ஆய்வு பணிகளுக்கு பின்னரே விமானம் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
