Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பெரிய கோவிலில்- போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

தஞ்சை பெரிய கோவிலில்- போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநா டுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் வாகனங்களில் வருவதால் பெரிய கோவில் பகுதிகளில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் விடுமுறை நாட்களில் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் வசதிக்காகவும்,

வெளியூ ரிலிருந்து அதிக அளவு வாகனங்கள் பெரிய கோவிலுக்கு வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைக் குறை ப்பதற்காகவும் தஞ்சாவூர் பெரிய கோவில் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.


இந்த ஒருவழி பாதை திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

பெரிய கோயில் எதிரே உள்ள வாகன நிறுத்தத்தில் மட்டுமே வாகனங்கள் நிறுத்த

அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களைப் பெரிய கோயில் சாலையில் நிறுத்தக் கூடாது. மீறினால் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

error: Content is protected !!