காவிரி நீர் கிடைக்காததால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு, 17 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடக அரசிடமிருந்து தண்ணீர் பெற வேண்டும் அல்லது ஏக்கருக்கு ரூ.10,000 சம்பா தொகுப்பு வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். தவறும் பட்சத்தில், டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
