கோவை அரிசி பாளையம் அருகே சாலையில் கிடந்த பிறந்த ஒரு மணி நேரமே ஆனா ஆண் குழந்தை உயிருடன் மீட்பு – வீசி சென்றது யார் ? காவல்துறை விசாரணை !!!
கோவை அடுத்து அரிசி பாளையம் மூலக்கடை வீதியைச் சேர்ந்த ஜோதிமணி, என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் வி.கே.சி கம்பெனி அருகே நடைபயிற்சி சென்றார். அப்பொழுது அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அவர் அருகில் சென்று பார்த்தார். அங்கு ஒரு ஆண்

குழந்தை கிடந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர், கொடுத்த தகவலின் பெயரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். இதில் அது பிறந்து ஒரு மணி நேரமே ஆன குழந்தை என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அரிசி பாளையம் மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரதீபா நேரில் சென்று குழந்தைகளுக்கு

தேவைக்கான முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் அந்த குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போத்தனூர்

காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். மேலும் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்து குழந்தையை ரோட்டில் வீசி சென்றது யார் ? என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.
