மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, கன்னட ஒக்கூடா கூட்டமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி எல்லையில் எல்லை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஒசூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
