Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் வீடு வாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்

சென்னையில் வீடு வாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் மும்பையில்தான் வசித்து வருகிறார். கடந்த பல வருடங்களுக்கு முன்பே அவர் மும்பை சென்றுவிட்டார். அவரது தங்கை அக்ஷராஹாசன் கூட மும்பையில்தான் வசித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் 2 அலுவலங்கள் செயல்பட்டு வருகிறது. ஒன்று அவரது மக்கள் நீதிமய்யம் கட்சியின் அலுவலகம், மற்றொன்று அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகம். இவை மட்டுமல்லாது ஈசிஆர் சாலையில் மிகப் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கடந்த சில வருடங்களாகக் கட்டி வருகிறார். சென்னையில் இதர இடங்களிலும் அவருக்கு சில வீடுகளும், கொடைக்கானலில் தேயிலைத் தோட்டம் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சென்னை வந்தால் கூட ஸ்ருதிஹாசன் ஹோட்டலில்தான் தங்குவாராம். அதே சமயம் அவரது அப்பா கமல்ஹாசனையும் வீட்டிற்குச் சென்று சந்திப்பார். ஈசிஆர் சாலையில் பிரம்மாண்ட வீட்டில் ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஆகியோர் தங்குவதற்கும் அறைகள், இதர வசதிகளுடன்தான் வீட்டை வடிவமைத்துள்ளார் கமல்.
இந்நிலையில் தற்போது சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வீடு ஒன்றை
ஸ்ருதிஹாசன் வாங்கியுள்ளாராம். அதன் கிரகப் பிரவேசப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. அவரது தோழிகள் மட்டுமே சிலர் உடன் இருக்கிறார்கள். அப்பா கமல்ஹாசன், வேறு உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

error: Content is protected !!