அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 12 இலட்சம் மதிப்பிலான 116 மொபைல் போன்கள் மீட்பு… உரிமையாளர்களிடம் மொபைல் போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார் வழங்கினார்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார் உத்தரவின்படியும், கூடுதல்

காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் (தலைமையிடம், இணைய குற்ற பிரிவு பொறுப்பு) வழிக்காட்டுதலின்படியும், காணாமல் போன மொபைல் போன்களை “CEIR PORTAL” உதவியுடன் கண்டுபிடிக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், CEIR PORTAL உதவியுடன் சுமார் ₹12இலட்சம் (12,00,000) மதிப்பிலான 116 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
இதனையடுத்து 16.07.2026 இன்று மீட்கப்பட்ட மொபைல் போன்கள், மாவட்ட காவல் அலுவலகம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார், அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் (தலைமையிடம், இணைய குற்ற பிரிவு பொறுப்பு), காவல் துணை கண்காணிப்பாளர்கள் சாலை இராம் சக்திவேல்(அரியலூர் உட்கோட்டம்), ராதாகிருஷ்ணன் (மாவட்ட குற்ற பதிவேடு கூடம்), இணைய குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் இசைவாணி, சட்ட ஒழங்கு காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் பொதுமக்கள் செல்போன் தொலைந்து விட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும். இணைய குற்றங்கள் குறித்த புகார்களை இலவச உதவி எண் 1930 அழைக்கவும்,www.cybercrime.com.gov.in என்ற இணையத்தில் பதிவிடவும் அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலையம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
