தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணா நகர் காலனியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கார்த்திக் ராஜா (23). இவர் கடந்த 13ஆம் தேதி குளத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலை விளாத்திகுளம் சாலை சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக் ராஜா, உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுத் தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கார்த்திக் ராஜா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
