Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட அதே வேளையில் குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடைகளை மறுசீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் தரமானதாக இல்லை என்று நீண்ட காலமாக மது பிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மதுபிரியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடைகளில் உயர்ரக மதுபானங்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.

அதன்படி, மதுபானம் வாங்குபவர்களுக்கு இனி டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அதிகளவில் தரமான இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஸ்காட்ச் விஸ்கி, ஒயின், வோட்கா, ஜின், ரம் மற்றும் பிரீமியம் பீர் போன்ற வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக விற்பனை செய்யப்படவுள்ளன.

பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் இந்த உயர்ரக மதுபானங்கள் நுகர்வோரின் நிதி நிலைக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் தற்போது தமிழ்நாட்டில் இதுவரை கிடைக்காத பல்வேறு பிரபலமான பீர் மற்றும் மதுபான பிராண்டுகள் விரைவில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

புதிய பிராண்டுகளின் இறுதிப்பட்டியல் விரை வில் வெளியிடப்படும் என்றும், அதன்பிறகு படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் மூலம் 100 க்கும் மேற்பட்ட மதுபான பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.

இருப்பினும், அவற்றில் குறிப்பிட்ட சில பிராண்டுகளுக்கு மட்டுமே நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அதே நேரத்தில், பிற மாநிலங்களில் விற்பனையாகும் பல பிரபலமான பீர் மற்றும் மதுபான வகைகள் தமிழ் நாட்டில் கிடைக்காததால், அவற்றை வாங்குவதற்காக புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு பலரும் செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையை மாற்றும் வகையில், சந்தை தேவையை ஆய்வு செய்ததுடன், நுகர்வோரின் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு கூடுதலாக 54 புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக பிரபலமான பீர் பிராண்டுகளான பீரா பிளாண்ட், பீரா ஒயிட், பீரா கோல்டு, லோன் வுல்ப் உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இறுதி ஒப்புதல் பெற்ற பிராண்டுகளின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது..

error: Content is protected !!