Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் காவிரி ஆற்றில் மோட்டார் மூலம் நீர் திருட்டு…கோரிக்கை

கரூர் காவிரி ஆற்றில் மோட்டார் மூலம் நீர் திருட்டு...கோரிக்கை

கரூர் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மோட்டார் மூலம் நீர் திருட்டு:மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து இரவு நேரங்களில் சட்டவிரோதமாகப் பெரிய மோட்டர்களைப் பயன்படுத்தித் தண்ணீர் திருடப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளது.

காவிரி ஆற்றின் தண்ணீரை வணிக மற்றும் சொந்த பயன்பாட்டிற்காக எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புஞ்சை கடம்பன்குறிச்சி பகுதியில் தனிநபர் ஒருவர் எவ்வித அனுமதியும் இன்றி, சட்டத்திற்குப் புறம்பாக இரவு நேரங்களில் பெரிய மோட்டர்களைப் பயன்படுத்தி காவிரி ஆற்றின் நீரைக் தொடர்ந்து உறிஞ்சி வருவதாகக் கூறப்படுகிறது.

சமூக ஆர்வலர் பொன்முத்து குமார் என்பவர் சம்பவத்தன்று இரவிலேயே கரூர் கோட்டாட்சியரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு புகார் மனு அளித்துள்ளார்.
எனினும், உடனடியாகப் புகார் அளிக்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகமோ அல்லது துறை சார்ந்த அதிகாரிகளோ இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், மோட்டரைப் பறிமுதல் செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சட்டவிரோதமாகத் தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அனுமதியின்றிப் பயன்படுத்தப்படும் மோட்டர்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!