டில்லி, நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வைகோவும், துரை வைகோ MP-யும் சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பில், தான் எழுதிய ‘வைகோவின் நாடாளுமன்ற உரை’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும்படி நிதியமைச்சருக்கு அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன், தமிழ்நாடு நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து மூவரும் ஆலோசித்ததாகவும் சொல்லப்படுகிறது.
