திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் உள்ள நகை கடைகளில், ஹால்மார்க் முத்திரையுடன் நகைகள் விற்பனை செய்யப்படுகிறதா என இந்திய தர நிர்ணய அமைப்பின் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 தனியார் நகை கடைகளில் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட ரூ.7.35 கோடி மதிப்பிலான 4.9 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
