டில்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று (ஜூலை.22) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு விவகாரத்தில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
