வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது
திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 54) கடந்த 21 ஆம் தேதி இவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் இவரது வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த செல்போனை திருடிச் செல்ல முயன்றுள்ளார். இதைப் பார்த்த லட்சுமி கூச்சலிடவே அங்கிருந்து தப்பி செல்ல முயன்றபோது, அவரை பொதுமக்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து உறையூர் போலீசில் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெருவை சேர்ந்த மன்சூர் அலிகான் ( வயது23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது
திருச்சி சஞ்சீவி நகர் புது காலனி சாலையில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த இ.பி. ரோடு பகுதியை சேர்ந்த சஞ்சய் என்கிற சச்சின் (வயது 26 ), அண்ணாமலை (வயது 22), காளிமுத்து (18) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அந்த 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 988 , போதை மாத்திரைகள் ரூபாய் 980 பணம், 2 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
திருச்சி கிருஷ்ணாபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஷகின் (வயது 48)இவர் ஜூஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 21 ந் தேதி இவர் தேவர் பார்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காந்தி மார்க்கெட் தையகாரத் தெருவை சேர்ந்த முனுசாமி என்கிற அஜித் (வயது28) என்பவர் அவரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இது குறித்து ஷகின் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் முனுசாமி என்கிற அஜித்தை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலி விசா கொடுத்து வாலிபரிடம் ரூபாய் 19 லட்சம் மோசடி
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் அபுதாஹிர் (வயது 42.) இவர் ஒரு புகைப்பட கலைஞர். இவர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். அதற்காக ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த விளம்பரம் குறித்து நேரில் விசாரித்த பிறகு, அவருக்கு கேரளா மலப்புரம் பகுதியை சேர்ந்த முஜீப் (வயது51) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இதையடுத்து அபுதாஹிர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து 24. 3 .2025 முதல் 11 .9.25 வரை பல்வேறு தவணைகளாக நேரில் மற்றும் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 19.5 லட்சத்தை அனுப்பி உள்ளனர். இதையடுத்து முஜீப் போலி விசா மற்றும் அனுமதியை அபுதாஹீர் வாட்ஸ்-சப் எண்ணிற்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து அந்த விசா போலி என்பது என தெரியவந்துள்ளது. இது குறித்து முஜீபை தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தாங்களை ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபுதாஹிர் மட்டும் அவரது நண்பர்கள் தில்லை நகர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
