Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணத்தில் முதல்வர் விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழக முதல்வர் விஜய் நடித்த படம் இன்று திரையிடப்படுவதை ஒட்டி கும்பகோணத்தில் ரசிகர்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கும்பகோணத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள 69வது திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் இன்று வெளியாகியதை முன்னிட்டு, ரசிகர்கள் மற்றும்

தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். கும்பகோணத்தில் உள்ள கார்த்திக் சினிமாஸ் மற்றும் விஜயலட்சுமி திரையரங்குகளில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டனர்.

மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து, உற்சாக முழக்கங்களுடன் திரையரங்க வளாகம் விழாக்கோலம் பூண்டது. இதையொட்டி, நடிகர் விஜயின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள், திரையரங்கு வளாகத்தில்

வைக்கப்பட்டபிரமாண்டமானகேக்கை வேளாண்மை துறை அமைச்சர் வினோத் கேக்கை வெட்டி ரசிகர்களுக்கு வழங்கினார். ரசிகர்கள்தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதல் காட்சியைக் காண அதிகாலையிலிருந்தே ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திரைப்படத்தை உற்சாகமாகக் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் அவர்கள் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் சேர்ந்து “ஜனநாயகன்” திரைப்படத்தையும் பார்வையிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத், “ஒரு சாதாரண ரசிகனைப் போலவே இந்த திரைப்படத்தை பார்க்க வந்துள்ளேன். ஒரு ரசிகனாக, விஜய் அவர்கள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்று தெரிவித்தார்.
ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு கும்பகோணத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

error: Content is protected !!