அரியமங்கலத்தில் வாலிபர் திடீர் சாவு
திருச்சிஅரியமங்கலம் காமராஜ் நாரை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரின் இரண்டாவது மனைவியின் மகன் ஜோதிமணி (வயது 33.) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் அந்த பெண் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனஉடைந்த ஜோதிமணிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் ஜோதிமணியை மீட்டு சிகிச்சைக்காக அரியமங்கலத்தில் உள்ள கிளினிக்கிற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஜோதிமணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்த புகாரின் பெயரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனுக்காக பயணி மீது சரமாரி தாக்குதல்- 3 வாலிபர்கள் எஸ்கேப்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பாடியை சேர்ந்தவர் ராகவன் (வயது) 42.சம்பவத்தன்று இவர் மயிலாடுதுறையில் இருந்து திருப்பூர் செல்வதற்காக திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு வந்த அவர் தனது பாக்கெட்டில் இருந்த செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் செல்போனை தேடி சென்ற அவர் ஒரு பஸ்சின் இருக்கையில் கிடந்ததை பார்த்துள்ளார்.அப்போது அங்கு இருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தமுத்து காமாட்சி 25, ஆதிஸ்லரன் 23, தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய் 22, ஆகிய மூன்று பேர் செல்போனை எடுத்து இது எங்களுடையது என்று கூறியுள்ளனர், இதனால் ராகவனுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராவணனை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராகவனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில்எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை விரட்டி கடித்த வளர்ப்பு நாய்
திருச்சி வயலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் நளினி.இவரின் மகன் வைபவ் ( வயது 16). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள வாசன்நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோமதி ( 40 ) என்பவரின் நாய் வைபவ்வை கடித்துள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் வைபவ்வை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பெயரில் அரசு மருத்துவமனை போலீசார்வழக்கு பதிவு செய்து கோமதியை கைது செய்தனர்.
லாட்டரி விற்ற வாலிபர் கைது
திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தஅரியமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 28) என்பவரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் 2 செல்போன்கள் மற்றும் ரூபாய் 4000ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
