திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை எடுத்து, மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றிய புகாரில் 3-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் ஏபல் அகஸ்டின் கைது செய்யப்பட்டார். 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மாணவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
