Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் முறைகேடை கண்டித்து… திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம்

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலகக்கோரியும் திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் காத்திருப்பு போராட்டம்.

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரை கண்டித்தும், தேர்வு வினாத்தாள் கசிவிற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு, காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

இளைஞர் பெருமன்ற மாநில துணைத்தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!