டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நடந்து வரும் போராட்டத்தில், பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டதில் இளைஞர் ஒருவருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெல்லட் துப்பாக்கியிலிருந்து ஒருமுறை சுடும்போது நூற்றுக்கணக்கான ஈய உருண்டைகள் (Lead pellets) உடலில் பாயும். இதனால் உடலில் புள்ளி புள்ளிகளாக காயங்கள் ஏற்படுவதுடன், பார்வை மற்றும் கேட்கும் திறனையும் இழக்கும் அபாயம் உள்ளது.
