Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முசிறி அருகே ஓடும் வேனில் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்

திருச்சி மாவட்டம் முசிறி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற வேனில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லில் இருந்து செங்கல் ஏற்றி்க்கொண்டு சிவகங்கை மாவட்டத்தை நோக்கி ஈச்சர் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்த வேனை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் ஓட்டி வந்தார்.

முசிறி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாரதிபுரம் புதிய சங்க சாவடி அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வேனின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை மூட்டம் எழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ரஞ்சித் குமார், உடனடியாக வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு கீழே குதித்தார்.

இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி தீயணைப்புத் துறையினர், மற்றும் நாமக்கல் தீயணைப்புத் துறையினர் உள்ளூர் பகுதி இளைஞர்கள் வேனில் எரிந்து

கொண்டிருந்த தீயைக் கட்டுப்படுத்தி அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும், இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த தொட்டியம் தாசில்தார் லஜபதி ராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார்.

இத்தீ விபத்து குறித்து காட்டுப்புத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!