Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்-ரயில்களில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க-தீவிர சோதனை

அரியலூர்-ரயில்களில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க-தீவிர சோதனை

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ரயில்கள் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார் உத்தரவின்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் (தலைமையிடம்) மேற்பார்வையிலும், செந்துறை காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவக்குமார் அவர்கள், அரியலூர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் ராஜவேலு தலைமையிலான காவலர்கள் மற்றும் ரயில்வே

காவல்துறையினர் இணைந்து, அரியலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் உதவியுடன் அரியலூர் ரயில் நிலையம் வழியே செல்லும் ரயில்களில் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையானது கொல்கத்தாவிலிருந்து திருச்சிராப்பள்ளி நோக்கி இயக்கப்படும் ஹவுரா விரைவு ரயில் முழுவதும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டதுடன், பயணிகளின் உடைமைகள்,

பயணப்பெட்டிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன. போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும் நோக்கில் சோதனை நடைபெற்றது.

(தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா, போதைப்பொருட்கள் நடமாட்டம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் பொதுமக்களுக்கு தெரிந்தால், TN Drug free appல் புகார் அளிக்கலாம்.(உங்கள் பெயர்/முகவரி/ தொலைபேசி எண் போன்ற எந்த தகவலும் தரத் தேவையில்லை).

error: Content is protected !!