Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி-பேருந்து ரேஸ்-பெரும் விபத்து நூலிழையில் தவிர்ப்பு

திருச்சி– மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளின் அராஜக போட்டியால், அரசு பேருந்து ஒன்று பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஈரோட்டிலிருந்து பஞ்சப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்தை, இடதுபுறமாக வந்த ஒரு தனியார் பேருந்து உரசுவது போல் முந்திச் செல்ல முயன்றது.
விபத்தைத் தவிர்க்க அரசு பேருந்து ஓட்டுநர் வாகனத்தை வலதுபுறம் திருப்பியபோது, அங்கு சென்ற மற்றொரு தனியார் பேருந்தின் பின்புற கண்ணாடியில் லேசாக மோதி நின்றது. இதில் அரசு பேருந்தின் சைட் மிரர்கள் உடைந்தன. அதிர்ச்சியடைந்த பயணிகள் அச்சத்துடன் இறங்கி,

\

போட்டி போட்டு இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர்.

error: Content is protected !!