Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 590

மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 01 மாற்றுத்திறன்

நபருக்கு காதொலி கருவியும், 01 மாற்றுத்திறன் நபருக்கு பிரெய்லி கடிகாரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி வழங்கினார்.

மேலும், முதல்வரின் முகவரித் துறையில் அளிக்கப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய ஆவணங்களின் அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!