பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, கரூர் ராம்தேவ் சேவா சங்க டிரஸ்ட் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கரூர் ராம்தேவ் சேவா சங்க டிரஸ்ட் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 மேற்பட்டோர் கோரிக்கை மனு வழங்கினர்.
மனுவில், இந்திய அரசியலமைப்பின் வரம்பிற்குள் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு, கோமாதாவிற்கு உயர்ந்த அளவிலான சேவை, ஆராய்ச்சி மற்றும் மானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும்,
மேலும், இந்தியாவில் பசுவதையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கவும்,

கோமாதாவிற்கு தேசியத் தாய், தேசிய தெய்வம், தேசிய பாரம்பரியம் அல்லது தேசிய சொத்து என்ற அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பசுக்களை பாதுகாக்கும் விழிப்புணர்வை தொடர்ந்து பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
