சென்னை, பரங்கிமலையில் ஆன்லைன் விளையாட்டால் காவலர் விஸ்வநாத் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார். நண்பர்களிடம் வாங்கிய கடனை திருப்பி தரமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது. திருமணமாகி ஒரு மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில் விஸ்வநாத் தற்கொலை செய்துகொண்டார்.
