Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீரன் சின்னமலை நினைவு நாள் – விதிமீறிய டூவீலர்கள் மீது நடவடிக்கை

தீரன் சின்னமலை நினைவு நாள்–விதிமீறிய டூவீலர்கள்-நடவடிக்கை

தீரன் சின்னமலை நினைவு நாள் – விதிமீறிய இருசக்கர வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு கரூரில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் பழைய பேருந்து

நிலையம் பகுதியில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நினைவு நாள் நிகழ்வில் கலந்து கொள்ள கோவை சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து வந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகனங்களில் பதிவு எண்

பலகைஇன்றி மற்றும் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட சில இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டனர்.

உரிய ஆவணங்கள் மற்றும் பதிவு விவரங்களை சமர்ப்பித்த வாகன உரிமையாளர்களுக்கு வாகனங்கள் மீண்டும் வழங்கப்பட்டன.

மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலான சாகச பயணங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடக் கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

பின்னர் இருசக்கர வாகனங்களில் ஈரோடு மாவட்டம் ஓடாநிலை பகுதியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக சென்றனர்.

இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டதால் கோவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!