பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8 மணி அளவில் அதிராம்பட்டினம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன், அதிராம்பட்டினம் முத்துகிருஷ்ணன் மற்றும் சுசித்ரா தம்பதியின் மகன் லக்னேஷ் வயது 8, தனது மார்பு மற்றும் வயிற்று பகுதியின் மேல் ஒவ்வொரு (கடப்பா) கற்களாக வைத்து 30

கற்கள் உடைப்பேன் என்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவன் 52 கற்கள் வரை உடைப்பதை தாங்கி சாதனை புரிந்தார். உலக சாதனை புத்தகங்களில் பதிவு செய்வதற்கு போதிய பொருளாதார பலம் இல்லாததால், மாணவனின் முயற்சியை பதிவு செய்வதாகவும் இதன் மூலம் ஸ்பான்சர் கிடைத்தால் உலக சாதனை புத்தகங்களில் பதிவு ஏற்றம் செய்ய மாணவன் தயாராக இருப்பதாகவும் அவரது பயிற்சியாளர் குலா ஸ்டாலின் கூறினார்.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், விளையாட்டுத்துறையினர், கராத்தே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
