திருச்சியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: –
சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பிலும், நமது அரசாங்கத்தின் சார்பிலும், இன்றைக்கு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைக்கு இந்தியா முழுக்க இருக்கக்கூடிய அனைத்து முக்கிய தலைவர்களும் பாராட்டத்தக்க வகையில மிகச்சிறந்த ஒரு ஆட்சியை நடத்தி இருக்கிறார். வரலாற்றிலேயே மிகச்சிறந்த ஒரு மாற்றத்தை, அரசியல் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார். மக்களுடைய பேர ஆதரவோடு இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வாக்களிக்காதவர்கள் கூட ரொம்ப சந்தோஷமாக இன்றைக்கு வாழக்கூடிய அளவிலே நம்முடைய முதலமைச்சருடைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. உண்மையிலேயே இங்கு தனித்து விடப்பட்டது ஸ்டாலின் தான். சட்டமன்ற நிகழ்வுகளை வீட்டிலிருந்து பார்க்கக்கூடிய நிலைமைக்கு தனித்து விடப்பட்டு இருக்கிறார்
அது மக்களுக்கே தெரியும். காவிரி விவகாரத்தில் எல்லா விஷயத்தையும் பேசிப் பேசித்தான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. செயலில் காட்டினாலே போதும். எங்களுடைய முதலமைச்சர் எப்பவுமே செயலில காட்டக்கூடிய முதலமைச்சர். செயல் மூலமாக இந்த ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடிய முதலமைச்சர். மக்களுக்கு தேவையானதை நாங்கள் செய்வோம்.
கோவில்களில் ஒரு சில இடங்களில்
பக்தர்களிடம் பணம் கேட்பதாக புகார்கள் வருகின்றன.
80 சதவீதம் எல்லாக் கோயில்களையும் சரி செய்து இருக்கிறோம். இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டிருப்பதாக எனக்கும் தகவல்கள் வருகிறது. அதன் மேல விசாரணை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த விசாரணையின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த பாரபட்சமும் பார்க்க மாட்டோம்.
15 வருஷமாக நானும் வந்து பயிற்சி பண்றேன், பயிற்சி பண்றேன்னு பயிற்சி பண்ணிக்கிட்டு இருக்கிறார் சீமான். முதலமைச்சர் ,ஜாதி மதம் பார்த்து பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார் என வெறுப்பு அரசியலை விதைக்கும் வகையில் எங்கள்
தலைவருக்கு எதிராக பேசுவதை விட்டுட்டு, உண்மையிலேயே
வெற்றி பெறுவதற்கான நோக்கத்தோடு பேசினார். நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தலில் ஏதாவது ஒரு இரண்டு இடத்தில் அவர் வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கு. அதை முயற்சி செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கிறேன்.ஓடி ஒளியவில்லை என்று பேசும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இவ்வளவு நாளா எங்கே காணாமல் போனார்? ஏன் வந்து தைரியமாக நிற்க வேண்டியதுதானே? கோர்ட் என்ன சொல்கிறதோ அந்த விதிமுறைகளை எல்லாம் பின் பற்ற வேண்டியது
தானே? அதெல்லாம் சும்மா வெளியில வந்து வீரத்துக்கு சொல்றதுதான். ஆனா உண்மையிலேயே தப்பில்லைன்னா தைரியமாக வந்து நின்று களத்தில சந்திக்க வேண்டியது
தானே? மீடியாவைப் பார்த்து எதாவது பேசணும்ன்றதுக்காக பேசுவாங்க. நிச்சயமாக இந்த ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எங்கள் தலைவர் சொன்னது போல, நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம்; ஊழல் செஞ்சவங்களையும் விடமாட்டோம், நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.
கடந்த ஆட்சியில் கோவில் நிலங்கள் அபகரிப்பு முறைகேடு தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடுறதை விவாதித்துக் கொண்டு இருக்கிறோம். அதேபோல வந்து கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், என்னென்னவெல்லாம் வந்து கோயில் சொத்துக்கள் வந்து அபகரிக்கப்பட்டு இருக்கிறது, கோயில் சொத்துக்கள் எப்படி எல்லாம் வந்து பல்வேறு இடங்களில் வந்து தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது, அதை எல்லாமே நாங்க ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். அந்த ஆய்வுகளின் அடிப்படையில் யாரெல்லாம் அதுல வந்து ஈடுபட்டு இருக்காங்க
என்பதை நாங்கள் பார்த்துக்கிட்டு இருக்கிறோம். நிச்சயமாக இந்து சமய அறநிலையத் துறையைப் பொறுத்தவரைக்கும், ஊழல்லை முற்றிலுமாக நிச்சயமாக ஒழிப்போம். இதுவரைக்கும் இருந்த ஊழல்களை எல்லாம் நாங்க ஒழித்து விட்டு, அதேபோல கோயில் சொத்துக்களை வந்து முறைக்கேடாக யார் யாரெல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள். முறைக்கேடாக என்ன நடந்து இருக்கும் எல்லத்தையும் விசாரித்து வருகிறோம் ஒவ்வொன்றாக விசாரித்து இருக்கிறோம். அதற்கான தனித்தனி குழுக்கள் வந்து கூடிய சீக்கிரத்தில் அமைக்க போறோம். ஒவ்வொரு கோயில்களினுடைய சொத்துக்களை வந்து பாதுகாப்பதற்காகவும், அதில் நடந்த முறைகேடுகளை கண்டுபிடிக்க குழுக்கள் அமைக்க போறோம். கோயில் சொத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்; இவ்வாறு அவர் கூறினார்
