வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தை சேர்ந்தவர் அருள்பிரவீன் (19). இவர் நேற்று திடீர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மேல கல்கண்டார் கோட்டை அய்யனார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரென்ஷ் (24) என்ற வாலிபர் அருள் பிரவீன் யிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இது தொடர்பாக அருள் பிரவீன் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அருள் பிரவீன்யிடம் செல்போனை திருடிய ரென்ஷ்யை கைது செய்துள்ளனர். ரெனேஷ்ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எடமலைப்பட்டி புதூர் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவன் மாயம் திருச்சி ஆகஸ்ட் 3 திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன் கமலேஷ் வயது 14)இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் இவர் எடமொழி பற்றி புதூர் பகுதியில் உள்ள ஒரு கருணை இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார் நிலையில் நேற்று அங்கிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை பல இடங்களில் தேடி பார்த்தோம் எங்கும் கிடைக்கவில்லை இது தொடர்பாக அவரது கருணை இல்லத்தின் பொறுப்பாளர் அந்தோணி ஜெயிக்கர் எடைமலைப்பட்டி புது போலீசில் புகார் கொடுத்தார் புகார் என் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கமலேசை தேடி வருகின்றனர்
இளம் பெண் மாயம் தந்தை போலீசில் புகார்
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் கடந்த 1 ந்தேதியில் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே மேம்பாலம் அருகில் வாலிபர் சடலம்
திருச்சியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் செட்டியாபட்டி ரெயில்வே பாலம் அருகில் சுமார் 36 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கேகே நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இறந்து கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்த வாலிபர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற முழு விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோ அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கஞ்சா விற்பனை செய்தவர் கைது
திருச்சி உறையூர் சாலை ரோடு அருகில் கஞ்சா விற்பனை செய்யவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ராம்ஜி நகர் காந்தி நகரை சேர்ந்த சதீஷ் (42) என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்து போலீசார் 500 கிராம் கஞ்சா மற்றும், இரு சக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு சதீஷை நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவரங்கத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர் கைது
திருச்சி ஆக3 – திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது திருவரங்கம் வீரேஸ்வரம் மேலத்தெருவை சேர்ந்த பாலாஜி (வயது 57) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பாலாஜியை கைது செய்து அவரிடமிருந்து 2,084 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
