கிருஷ்ணகிரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் காலி மதுபான பாட்டிலைத் திரும்பப் பெறுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருண்குமார் (33) என்ற இளைஞர் கல்லால் தாக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலைக்குக் காரணமான இருவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
