Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிட்டா கேட்ட விவசாயியிடம் மீன் வறுவல்- குழம்பு கேட்ட விஏஓ

சிட்டா கேட்ட விவசாயியிடம் மீன் வறுவல்- குழம்பு கேட்ட விஏஓ

குளித்தலை அருகே தேவர்மலை கிராமத்தில் சிட்டா கேட்ட விண்ணப்பித்த விவசாயிடம் மீன் வறுவல் மற்றும் குழம்பு ஈர வெங்காயம் தனித்தனியாக பார்சல் செய்து வாங்கி வரவ சொல்லி கிராம நிர்வாக அலுவலர். அதில் விவசாயியின் மகன் அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தரவில்லையா? இதுபோன்று வாங்கி வர சொல்லி சொல்லி இருக்கிறார்களா என பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் வட்டம் தேவர்மலை கிராம நிர்வாக அலுவலராக கார்த்திக் என்பவர் பணியில் இருந்து வருகிறார்.

அப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற விவசாயி வங்கியில் கடன் பெறுவதற்காக சிட்டா கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் விவசாயின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய கிராம நிர்வாக அலுவலர் விவசாய இடம் எங்கே உள்ளது என்று கேட்டும். அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அப்போது தான் பாளையத்தில் உள்ளதாகவும் , அரை மணி நேரத்தில் விஏஓ அலுவலகத்தில் உங்களை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

அப்போது கிராம நிர்வாக அலுவலர் பாளையம் பஸ் ஸ்டாண்டில் பிரண்ட்ஸ் ஹோட்டலில் இரண்டு எண்ணெயில் பொறித்த மீன் வருவல், மீன் குழம்பு மற்றும் தனியாக ஈர வெங்காயம் பார்சல் செய்து வாங்கி வா. என் செல்லமில்ல கட்டி வாங்கி வா எனக்கூறினார்.

இதன் பிறகு விவசாயி தேவராஜ் மகன் செல்போனை வாங்கி கிராம நிர்வாக அலுவலரிடம் பேசியுள்ளார்.

அப்போது அந்த விவசாயின் மகன் உங்களிடம் ஒரு டவுட் கேட்கலாமா

கிராம நிர்வாக அலுவலர் சொல்லுங்க

கவர்மெண்ட் உங்களுக்கு சம்பளம் தரவில்லையா? அரசாங்கம் உங்களிடம் இது போல் சிட்டா பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் மீன் வறுவல் குழம்பு எல்லாம் வாங்கி தர சொல்லி கூறியுள்ளார்களா? என கேட்டபோது தனக்கு எதுவும் வேண்டாம் நீங்கள் அலுவலகத்திற்கு வந்து சிட்டா வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார் நான் நேரடியாக வருகிறேன் என்று கூறிய போது நீங்கள் வர வேண்டாம் உங்கள் தந்தையை மட்டும் அலுவலகத்திற்கு அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இல்லை சார் நான் உங்களிடம் நேரடியாக சில கேள்விகளை கேட்க வேண்டும் நானே நேரடியாக வருகிறேன் என்று சொன்னபோது நீங்கள் வர வேண்டாம் உங்கள் தந்தையை மட்டும் அனுப்பி வையுங்கள் என்று கூறிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.

எண்ணெயில் பொரித்த மீன் வறுவல் குழம்பு வாங்கி வர சொல்லி கிராம நிர்வாக அலுவலர் விவசாய இடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்ததன் காரணமாக குளித்தலை சார் ஆட்சியர் அவரை தற்போது பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

error: Content is protected !!