Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணவன் அடித்ததால் கள்ளக்காதலுடன் ஓடி போன இளம்பெண்

ஆந்திராவில் 27 வயதான திருமணமான பெண் ஒருவர், தனது கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, வேறொரு ஆணுடன் ஓடிப்போய் அவரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 

சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஷோபா என்ற பெண், குடுபள்ளி மண்டலம், குடிகோத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை பெற்றோர் விருப்பத்தின்பேரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஷோபாவுக்கு குண்டூர் மாவட்டம், கண்ட்ரிகா கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி நாயக் என்பவர் தவறான தொலைபேசி அழைப்பின் மூலம் அறிமுகமானார். இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து, அது பின்னர் காதலாக மாறியது. அவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த உறவைப் பற்றி அறிந்த சிரஞ்சீவி, இந்த விவகாரம் தொடர்பாக ஷோபாவிடம் கேட்டு அவரை அடித்துள்ளார். இதனால் வீட்டைவிட்டு பாலாஜியுடன் ஓடிப்போன ஷோபா, இருவரும் சிறிய கோவில் ஒன்றை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஷோபா வீட்டை விட்டுச் சென்ற பிறகு, சிரஞ்சீவி உள்ளூர் காவல் நிலையத்தில் காணாமல் போனதாகப் புகார் அளித்தார். பின்னர், அவர் அந்தத் தம்பதியரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, ஷோபா மற்றும் பாலாஜி நாயக் ஆகியோரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.  ​​தன்னைத் திருமணம் செய்ய மறுத்தால் தற்கொலை செய்துகொள்வதாக ஷோபா மிரட்டியதாகவும், அவரது அழுத்தத்தின் காரணமாகவே தான் அவரைத் திருமணம் செய்துகொண்டதாகவும் பாலாஜி நாயக் காவல்துறையிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!