எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தஞ்சாவூரில் திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதே போல், ஒரே இடத்தில் திமுகவினரும், தவெகவினரும் திரண்டு போராட்டம் நடத்தியதால், போலீசார் இருதரப்பையும் விலக்கி சமாதானம் செய்தனர். தவெக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், காவிரி விவகாரத்தை திசைதிருப்பும் நோக்கில் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
