Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதயநிதி கைது.. திருச்சியில் திமுகவினர் மறியல்

தமிழக முதல்வர் விஜய் குறித்து தஞ்சையில் நேற்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக கூறி வழக்குப்பதிவு செய்து,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக, மேற்கு மாநகர திமுக சார்பில் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று மத்திய பஸ் நிலையத்தில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது தமிழக அரசை கண்டித்து திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.இந்த மறியல் போராட்டத்தில்,மாவட்ட பொருளாளர் துரைராஜ்,முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர்

குடமுருட்டி சேகர்,மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ்,கமால் முஸ்தபா,மாநில பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம்,கவுன்சிலர்கள் புஷ்பராஜ்,ராமதாஸ்,மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் மணிவண்ண பாரதி,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி

கண்ணன், பிராட்டியூர் மணிவேல்,இன்ஜினியர் நித்தியானந்தம், வட்டச் செயலாளர்கள் வாமடம் சுரேஷ்,பி ஆர் பி பாலசுப்பிரமணியன்
உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கைதாயினர்.
தொடர்ந்து திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் வைரமணி தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்பின்னர் மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் வைரமணி உள்பட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!