விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் இன்று சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையானார். கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக மார்க்கண்டேயன் ஜூலை 20-ம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் மார்க்கண்டேயனுக்கு நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
