Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் பலி

அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் பலி-தூத்துக்குடியில் பரிதாபம்

தூத்துக்குடி இனிகோ நகரில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது மகன் குணா (34). இவர் கடல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஸ்டெபி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா என்பதால் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்ததாக தெரிகிறது. இரவு வீட்டுக்கு வந்து படுத்து உறங்கியவர் காலையில் இறந்த நிலையில் இருந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாதம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

error: Content is protected !!