உலக தாய்ப்பால் வாரம் 2026-ஐ முன்னிட்டு, “வாழ்க்கைக்கு நிலையான தொடக்கத்திற்கான தாய்ப்பால்: பயனளிப்பவற்றை வலுப்படுத்துவோம்” என்ற கருப்பொருளை வலியுறுத்தி, தமிழ்நாடு பச்சிளம் குழந்தை நலச்சங்கம், மேத்தா மருத்துவமனை மற்றும் சென்னை ரோட்டரி கிளப், கீழ்ப்பாக்கம் மாவட்டம் 3234 ஆகியவை இணைந்து தாய்ப்பால் விழிப்புணர்வு நடைப்பயணத்தை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்தின. இந்நிகழ்வில் தமிழ்நாடு பச்சிளம் குழந்தை நலச்சங்கத்தின் சார்பில் மரு. லட்சுமி, மரு. வைதீஸ்வரன், மரு. நாராயணன் ஆகியோர் தாய்ப்பாலின் நன்மைகள் குறித்தும், தாய்ப்பால் தானத்தை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உரையாற்றினர்.
