அரசாணை 204 ரத்து, ‘நர்சிங் ஆபீசர்’ பதவிப் பெயர் மாற்றம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அரசு நர்சுகள் போராட்டம்.
கரூர் காந்தி கிராமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு, தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்காமல், ஏற்கனவே உள்ள பணியிடங்களை பணி நிரவல் (Re-deployment) செய்யும் அரசாணை எண் 204-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ‘ஸ்டாப் நர்ஸ்’ என்ற பதவிப் பெயரை ‘நர்சிங்

ஆபீசர்’ என மாற்ற வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, ஆகஸ்ட் 6 முதல் 8-ஆம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை, மருத்துவ சேவைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ‘குரல் மூடி’ அமைதிப் போராட்டம் நடைபெறும் என சங்கம் தெரிவித்துள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டப் போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
