ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு முருக கடவுளின் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.
மூலவர் தங்க கவசம் வைரவேலுடன் பக்தர்களுக்கு காட்சி .
கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயம் முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலாக விளங்குகிறது.
இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று ஆடி கார்த்திகை திருவிழா .
ஆடி கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது .
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் .
மூலவர் தங்க கவச மற்றும் வைரவேலுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
உற்சவர் ஆறுமுகசுவாமி வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .
சில பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
ஆடி கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு சுவாமி மலையில் இன்று இரவு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது . தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலைத் தெப்பமாக நடைபெற உள்ளது .
