சென்னை மெட்ரோ-மூலக்கடை நிலையத்தை சுரங்கம் தோண்டும் ” நீலகிரி” இயந்திரம் வந்தடைந்தது. மாதவரம் நெடுஞ்சாலை நிலையத்தில் இருந்து 819 மீட்டர் நீளம் சுரங்கம் தோண்டி “நீலகரி” இயந்திரம் வந்தடைந்தது. மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் ( புரசைவாக்கம்) வரை தோண்டும் பணியின் ஒரு பகுதியாக பணி நிறைவுபெற்றது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2ல் இதுவரை 24 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணியை நிறைவு செய்துள்ளன.
