மும்பை: 2013-ம் ஆண்டு டெஹெல்கா பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டார். கோவா அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. சிறை தண்டனையை அடுத்து தருண் தேஜ்பால் 2 வாரத்தில் சரணடைய மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
