Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அரசு விழாவில் அரசியல்வாதிக்கு முக்கியத்துவம்-சலசலப்பு

கரூர் அரசு விழாவில் அரசியல்வாதிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது மாவட்ட நிர்வாகம்; அந்த அரசியல் பிரமுகரை முன் வரிசையில் அமர வைத்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அழகு பார்த்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நகராட்சி நிருவாக இயக்குநரகம் கரூர் மாநகராட்சி ரூ. 245.07 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டு திட்டப்பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசர் விஜய் கையால் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பால்வளத்துறை மேம்பாட்டு அமைச்சர் விஜயலட்சுமி சின்னசாமி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முத்துக்குமரன், மேயர் வெ.கவிதா, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சத்யா, கரூர் மாநகராட்சி ஆணையர் பிரித்திவிராஜ் ஆகியார் கலந்து கொண்டனர்.

இந்த அரசு விழா நிகழ்ச்சியின் போது வரவேற்புரை ஆற்றிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார் முன் வரிசையில் தமிழக வெற்றி கழகம் கரூர் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார். இந்த செய்தியானது செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திலிருந்து வெளியாகும் அரசுக்குறிப்பு படத்தில் போட்டோஷாப் மூலமாக எடிட் செய்து புகைப்படம் அனுப்பி வைத்துள்ளனர். அரசு பொறுப்பில் இல்லாத அரசியல்வாதிகளை முன் வரிசையில் உட்கார வைத்தது அங்கே சலசலப்பை ஏற்படுத்தியது. இது தவறான முன் உதாரணமாகப் பார்க்கப்பட்டது.

error: Content is protected !!