தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயலட்சுமி நகரில் குறல் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எட்டாவது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் படிப்பகச் செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் முன்னிலையில் வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் அ.ரகமதுல்லா மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் இரா. செந்தூரப் பாண்டியன், பேராசிரியர் இரா.குட்டிமணி, அமிர்தா திராவிட செல்வம், வெள்ளூர் முருகேசன், மாரிமுத்து, கோவிந்தன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
