Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் பலி.. திருச்சியில் சம்பவம்

வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் பலி..திருச்சியில் சம்பவம்

தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை

திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஞானபாலன் இவரது மகள் பொற்ச்சுடர் (30) இவர் பியூட்டி பார்லர் செல்வதற்காகத் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார் அவர்கள் தர மறுத்ததால் மன உளைச்சலில் இருந்து உள்ளார் இதனால் விரக்தியடைந்த பொற்சுடர் வீட்டு மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் கிருஷ்ணவேணி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் பலி

திருச்சி திருவரங்கம் தாலுகா அதவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் மூர்த்தி இவரது மகன் ராஜ்குமார் (34). இவர் கடந்த முன் ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வந்தார். பின்னர் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள மலட்டாற்று வாய்க்காலில் தவறி விழுந்தார் இதில் அவர் பரிதாபமாக இறந்தார் இதுகுறித்து அவரது தாய் புஷ்பலதா அளித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!