கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்புக்கு பயிலும் மாணவிக்கு அப்பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் பாலியல் தொல்லை தந்தாக புகார் எழுப்பப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் அகஸ்டின் மீது பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொதுமக்களின் பிடியில் இருந்து ஆசிரியரை மீட்டனர்.
பின்னர் போலீசார் அந்த ஆசிரியரை கைது செய்து பாதுகாப்போடு பண்ருட்டி அனைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இந்த ஆசியர் கடந்த நாட்களுக்கு முன்புதான் இந்த பள்ளியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த குற்றசாட்டு குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்த பின் அவர் மீது வழக்கு பதியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
