Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கால்நடை மருத்துவப் படிப்பு-பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

கால்நடை மருத்துவப் படிப்பு-பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று அவர் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ளக் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் பி.வி.எஸ்.சி (B.V.Sc & A.H) உள்ளிட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இதுவரை பிளஸ் 2 (12-ஆம் வகுப்பு) மேல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அகில இந்திய அளவில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப் படிப்பு சேர்க்கை தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் விஜய் அனுப்பியுள்ளக் கடிதத்தில், கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாதிக்கும் வகையிலானப் பொது நுழைவுத் தேர்வு முறையைக் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்குக் கொண்டு வரக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நுழைவுத் தேர்வுகள் நகர்ப்புற மற்றும் பயிற்சி மையங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கே சாதகமாக அமையும் என்றும், கிராமப்புற மாணவர்களின் உரிமையைப் பறிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கையைத் தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!